பிற்காலத்தில் கிடைக்கப் போகும் அல்லது இவ்வுலகிலேயே இல்லாத ஒரு நண்பரை எண்ணிக் கொண்டு பாடியது:
எனக்கென்று முளைத்த அரியதோர் நட்பாக இருப்பாயா?
என் வேதனைகளை தான் புரிந்து கொள்வாயா?
நான் சொல்லாமலே
என் மனதில் உள்ளவற்றை எனது கண்களினால் தெரிந்து கொள்வாயா?
என்னுடனிருப்பாயா?
நான் செல்லும் இடமெல்லாம்
நிழலைப் போல் தொடர்வாயா?
என்னை தேடி வருவாயா?
அல்லது நிதியைப் போல்
ஓடிக்கொண்டே இருப்பாயா?
நட்பு பூண்டவாறு என்னை
வெள்ளத்திலே தள்ளிக்கொண்டு
கடலிலே சேர்ப்பித்து
நான் கண்களை மூடிய பிறகு
இருளில் மூழ்கிக் தவிக்கவிட்டு
அமைதி சூழ்ந்த கடலின் நடுவே
என்னை அடக்கம் செய்தாற்போல்
கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவாயா.. என்னை உண்மையிலே கொன்று விடுவாயா..